பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு, பின்னி மில், ஸ்பர் டேங்க் ரோடு, நேரு ஸ்டேடியம் பகுதிகளில் மின்சாரம் தருவதில் தாமதம். தாமோதரன் தெரு, முத்தமிழ் நகர், கொளத்தூர் பாலாஜி நகர், சாத்தாங்காடு, மீஞ்சூர் பகுதிகளில் மின்சாரம் தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கல் மண்டபம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மழை நீர் தேக்கம், ஈரப்பதம் காரணமாக மின்சாரம் வழங்குவதில் தாமதமாகியுள்ளது. துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும்.
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி சென்னை மையப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 மின்னூட்டிகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைநீர் சூழ்ந்ததால் 230 கி.வாட் KITS பார்க் துணை மின் நிலையம், 110 கி.வாட் பெரும்பாக்கம் துணை மின் நிலைய இயக்கபடுகிறது. மழைநீர் சூழ்ந்ததால் TNSCB மற்றும் எண்ணூர் துணை மின் நிலையங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது. அசாதாரணமான சூழலில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுவீச்சில் பணியாற்றி வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
The post மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களால் மின் விநியோகம் சீரமைப்பதில் தாமதம்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.
