திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் தீவிர புயலாக வலுவடைந்தது. சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடதமிழ்நாடு-தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி புயல் நகரும். காலையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல், தற்போது 8 கி.மீ. வேகத்தில் குறைந்தது.

சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் நகரும் வேகம் குறைந்ததால் சென்னை, திருவள்ளூரில் கனமழை தொடரும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை வரை 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று இரவு வரை மழை தொடரும். 2015 வெள்ளத்தின்போது 33 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.

The post திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Dinakaran.

Related Stories: