தமிழ், ஆங்கிலத்தில் திறன் வேண்டும் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

கரூர்: தகவல், கல்வி, தொடர்பு பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலத்தில் எழுதும் திறன் வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்கம் திட்டப் பிரிவில் ஊரக பகுதிகளின் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் தகவல், கல்வி, தொடர்பு பணிகளுக்கு புறச்சேவை நிறுவனம் முலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மாவட்ட திட்ட மோண்மை அலகு, பணியிடம் 1, இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல், இளங்கலை கட்டிட பொறியியல் படித்திருக்க வேண்டும். இந்தியாவில் ஒன்றிய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக் கழக மானிய சட்டம் 1965ன் பிரிவு 3ன் கீழ் ஒரு பல்கலைக் கழகமாக கருதப்படுவது அல்லது அதற்கு சமமான தகுதி. சுற்றுச்சூழல், கட்டுமானத்துறை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு, திட, திரவக்கழிவு மேலாண்மை மற்றும் மேம்பாட்டு துறையில் 1 முதல் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம் ரூ. 35ஆயிரம். புறச்சேவை நிறுவனம் மூலம் தேர்வு நடைபெறும்.

The post தமிழ், ஆங்கிலத்தில் திறன் வேண்டும் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: