சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் எனது சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில் கூறியதாவது; மாற்றுத்திறன் கொண்ட சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் எனது #WorldDifferentlyAbledDay வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கிடும் விதமாக, ரூ.1500 என்றிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000 என உயர்த்தி வழங்க நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

2021-ல் கழக அரசு அமைந்த பிறகு, 2ஆவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டிருப்பது, மாற்றுத்திறனாளிகளின் ஏற்றத்துக்கும் – வளர்ச்சிக்கும் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்பதற்கான சான்றாகும். மாற்றத்திறனாளிகளின் தன்னம்பிக்கைப் பயணமும் – லட்சியமும் வெல்லட்டும். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் எனது சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: