வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது `மிக்ஜாம்’ புயலாக உருவானது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது `மிக்ஜாம்’ புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலையை வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றது. மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசு கூடும் என வானிலை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு 310 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு -தென்கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புயல் நகர்ந்து 4-ம் தேதி வட தமிழ்நாடு, ஆந்திரா கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5-ம் தேதி முற்பகலில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 4-வது புயல் இதுவாகும்.

ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தொலைபேசி மூலம் பேசிய மு.க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியாளர்களிடம் மழை பாதிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

விமானங்கள் ரத்து

மிக்ஜாம் புயல் எதிரொலியாக மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத் செல்ல இருந்த இரண்டு விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வரை இருந்த ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

The post வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது `மிக்ஜாம்’ புயலாக உருவானது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: