போலி வாக்காளர் அட்டை தயாரித்த 3 பேர் கைது

திருமலை: தெலங்கானாவில் கடந்த மாதம் 30ம் தேதி சட்ட பேரவை தேர்தல் நடந்தது. இதில் நாம்பள்ளியை சேர்ந்த முகமது ஜாகிர், முகமது ஷாபுதீன், விஜய்நகர் காலனியை சேர்ந்த ரித்தேஷ் குப்தா ஆகியோர், அத்தொகுதியில் இருந்து வெளியேறியவர்கள், இறந்தவர்கள், வாக்களிக்காமல் இருந்தவர்களை கண்டறிந்து போலி வாக்காளர் அட்டை தயாரித்தனர்.

பின்னர், இவர்கள் தயாரித்த போலி வாக்காளர் அட்டையுடன் வாக்களிக்க வாக்குச்சாவடி எண்-123க்கு வந்துள்ளனர். இதனை கவனித்த போலீசார் இவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 67 போலி வாக்காளர் அட்டைகள், வாக்காளர் பட்டியல், 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

The post போலி வாக்காளர் அட்டை தயாரித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: