தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


சென்னை: வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் புயல் 5-ம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கையால் புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வுமையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி 04.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (ம) கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

* சென்னை

வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும் சென்னை மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி திங்களன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

* காஞ்சிபுரம்

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

* செங்கல்பட்டு

புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் டிசம்பர் 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: