புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: மிச்சாங் புயலை எதிர்கொள்ள மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் சென்னைக்கு 780 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும் என்றும், அது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறி, 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி அதிகாலையில் தேதி சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார். பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதியில் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயாராக உள்ளனர். புயலால் சேதம் அடையும் மரங்கள், மின் கம்பங்களை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய மீட்புக் குழுவினர் 435 பேர் தயார் நிலையில் உள்ளனர். மின் கம்பங்கள், மின் வயர்கள் செல்லும் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

பயிர்கள் சேதம் அடைந்தால் கணக்கெடுப்பு நடத்திதான் நிவாரணம் வழங்கப்படும். மழை பாதிப்புகளால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மழை பாதிப்புகளால் 98 கால்நடைகள் பலி, 420 குடிசை வீடுகள் சேதமாகியுள்ளது. மாநில மற்றும் தேசிய மீட்புக் குழுவினர் 435 பேர் தயார் நிலையில் உள்ளனர். சென்னை கடற்கரையோர மாவட்டங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 162 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.13 லட்சம் பேர் தங்கும் வகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன இவ்வாறு கூறினார்.

The post புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: