தமிழ்நாட்டில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துக்கள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!

சென்னை :கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையையும், இந்தியளவில் 3வது வீராங்கனை என்ற சாதனையையும் வைஷாலி படைத்துள்ளார். கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி. இவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில்,வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”தமிழ்நாட்டில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துக்கள். செஸ் வீராங்கனை வைஷாலியின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வைஷாலியின் வெற்றிப் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகளாக நீங்களும் சகோதரர் பிரக்ஞானந்தாவும் வரலாறு படைத்துள்ளீர்கள்,”என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்தியாவின் 84வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக செஸ் வீராங்கனை சகோதரி வைஷாலி அவர்களுக்கு, பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் மூன்றாவதாகவும், தமிழக அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ள சகோதரி வைஷாலி அவர்கள், உலக அரங்கில் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துக்கள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: