ஆட்டோவில் கடத்தப்பட்ட 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

 

கம்பம், டிச. 2: உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலகிற்கு ரேஷன் அரிசி கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உத்தமபாளையம் பகுதியில் எஸ்ஐ சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 11 பிளாஸ்டிக் சிப்பங்களில் 550 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த கடத்தலில் சம்மந்தப்பட்ட சின்னமனுார் சாமிகுளம் 2வது தெருவைச் சேர்ந்த காமாட்சி மகன் கணேசன் (37) என்பவரை கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் பிரிவு பகுதியில் சென்ற ஆட்டோவில் 500 கிலோ அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தலில் சின்னமனூர் அழகர்வேல் பாண்டியன் (56) தொடர்புடையது தெரிய வந்தது. அவரை சின்னமனூர் போலீசார் கைது செய்து,பறிமுதல் செய்த அரிசியை உத்தமபாளையம் குடிமை பொருட்கள் பதுக்கல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post ஆட்டோவில் கடத்தப்பட்ட 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: