கல்லூரி பேருந்து லாரி மோதல்

கரூர், டிச. 1: நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நேற்று காலை புலியூர், தொழிற்பேட்டை பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கிச் சென்றது. கரூர் தொழிற்பேட்டை அருகே பேருந்து சென்ற போது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு முதியவர் சைக்களில் குறுக்கே வந்ததாகத் தெரிகிறது. எனவே, கல்லூரி பேருந்தை ஒட்டி வந்த ஓட்டுநர் திடிரென பிரேக் போட்ட போது, பின்னால் வந்த அரிசி ஏற்றி வநத லாரி, பேருந்தின் பின்புறம் மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், சைக்களில் சென்ற முதியவர் மட்டும் கிழே விழுந்து காயமடைந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கல்லூரி பேருந்து லாரி மோதல் appeared first on Dinakaran.

Related Stories: