சில்லிபாயின்ட்….

* லக்னோவில் நடைபெறும் சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டியின் 2வது சுற்றில் வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகளிடம் மோதிய இந்தியர்கள் அனைவரும் தோற்று வெளியேறி விட்டனர், அதே நேரத்தில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் இணை 21-9, 21-5 என்ற நேரடி செட்களில் சக வீராங்கனைகள் தன்யா நந்தகுமார், ரித்தி கவுர் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

* முட்டி வலியால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டார். உடல் திறனை மேம்படுத்த, அவர் இலகுவான பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.

* ‘முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோர் தொடர்ந்து இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யாததில் ஏதோ மர்மம் உள்ளது’ என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நேற்று சந்தேகம் தெரிவித்துள்ளார்.

 

The post சில்லிபாயின்ட்…. appeared first on Dinakaran.

Related Stories: