அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை பயனாளிகளுடன் காணொளி மூலம் பிரதமர் கலந்துரையாடினார். ஜன் ஔஷதி கேந்திராக்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும், பிரதான் மந்திரி மகிளா கிசான் ட்ரோன் கேந்திராவையும் பிரதமர் இந்த நிகழ்வின் போது தொடங்கி வைத்தார். மேலும், மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்; 3 ஆண்டில் 15,000 ட்ரோன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தியோகர் எம்ய்ஸ் மருத்துவமனையில் 10,000வது மக்கள் மருந்தக மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அரசு திட்டங்களின் பலன்கள் உரிய நேரத்தில் பயனாளிகளை சென்றடையும் நோக்கில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தால் மருந்துகளின் செலவு வெகுவாக குறைந்து வருகிறது. செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டும். அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும் என்று தெரிவித்தார்.

The post அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: