விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சிறுதானிய உணவுபொருட்கள் கண்காட்சி சிறப்பாக தயாரித்த குழுக்களுக்கு பரிசு

கரூர், நவ. 30: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து சிறுதானிய உணவுப்பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவு திருவிழா 2023 நடந்தது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கண்காட்சிக்கு கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.

இதுகுறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:
சிறுதானியங்களின் உணவு திருவிழாவின் போது அனைத்து வகையான சிறு தானியங்களின் அரங்குகள் அமைத்து அவற்றின் பயன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள், முதல்வர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சேர்ந்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறுதானிய உணவு திருவிழாவில் நீங்கள் இல்லாமல் இவ்வளவு சிறப்பாக நடத்திருக்காது. இதில், சிறப்பு விருது என்று சொல்வதற்கு 3 பேரை ஒரு அடையாளத்திற்காக தேர்வு செய்துள்ளீர்கள். மற்றவர்கள் தயாரித்த உணவு அல்லது உணவு பொருட்களும் சிறப்பாக இல்லை என்ற அர்த்தம் இல்லை. இங்கே உள்ள அனைவருக்குமே பரிசு பெற தகுதியானவர்கள். அனைத்து அரங்கில் சிறுதானிய உணவுகளை அமைத்த அனைவருக்கும் பரிசு பெற தகுதியானவர்கள். அனைத்து உணவு பொருட்களுமே சுவை மிகுந்ததாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுதானிய உணவு விழாவில், சிறப்பாக சிறுதானியங்கள் உணவுகளை தயாரித்த முதல் 3 இடங்களை பிடித்த குழுக்களுக்கு பரிசு மற்றும் கேடயம வழங்கப்பட்டன. அதன்படி, முதல் பரிசு குளித்தலை வட்டாரம் ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ. 4000 கடவூர் வட்டாரத்திற்கும், மூன்றாம் பரிசு ரூ. 2000ம் கரூர் வட்டாரத்திற்கும், சிறப்பு பரிசு பெற்ற அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, தோகைமலை, தாந்தோணி ஆகிய வட்டாரங்களுக்கும், அரங்கு அமைத்த அனைத்து குழுவினர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், இணை இயக்குநர் வேளாண்மை ரவிச்சந்திரன், உதவி ஆணையர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சவுமியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சிறுதானிய உணவுபொருட்கள் கண்காட்சி சிறப்பாக தயாரித்த குழுக்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: