தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மாதம் டிசம்பர் 2தேதி வரை 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவில் கனமழை பெய்த நிலையில், காலையிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது

ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகருமா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: