உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு.. 17 நாள் போராட்டத்துக்கு பின் கிடைத்த வெற்றி..!!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாள் கடினமான போராட்டத்திற்குப் பிறகு நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்கும் மாலை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தனர். பின்னர் தொழிலாளர்களுக்கு அங்கேயே உள்ள மருத்துவ முகாமில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சின்யாலிசார் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 45 நிமிடத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு.. 17 நாள் போராட்டத்துக்கு பின் கிடைத்த வெற்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: