“வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் கேரள ஆளுநர்: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு

டெல்லி: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கேரள ஆளுநரின் முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக பல மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்று கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் முன்பு சுட்டிக் காட்டியது. இதையடுத்து, பஞ்சாப் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வாசித்து பதில் அளிக்குமாறு ஆளுநரின் செயலாளரைக் கேட்குமாறு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், முடிவெடுக்காமல், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ரத்து செய்யாமல், காலவரையின்றி மசோதாவைத் தொடர ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் அந்த வழக்கில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுப்பி வைத்துள்ளார். இத்தகைய கேரள ஆளுநரின் முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள ஆளுநருக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கேரள ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என கேரள ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது, மசோதாக்களை மேலும் தாமதப்படுத்தும் முயற்சியில் ஆளுநர் ஈடுபடுவதாகவும் கேரள மாநில அரசு குற்றச்சாட்டு வைத்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மசோதாக்கள் மீது காலதாமதமின்றி ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் 2 ஆண்டுகளாக மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியது. பஞ்சாப் ஆளுநர் வழக்கில் பிறப்பித்த உத்தரவின் படி தாமதமின்றி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் செயல்படவில்லை என்றால் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிப்பதில் விதிமுறை வகுக்கவேண்டியது வரும். முதலமைச்சரை ஆளுநர் சந்திக்க விரும்புவது அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்ளவா, பிரச்சனைக்கு தீர்வு காணவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

The post “வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் கேரள ஆளுநர்: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: