கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2016ம் ஆண்டுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கலெக்டர் ஆய்வு

கரூர், நவ. 29: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கீழ்தளம் அரை எண் 14ல் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் திறந்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:
2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளர் கீதாவால் தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு வரப்பெற்று, அந்த மனு, உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், மனுதாரர், மேல்முறையீடு எதுவும் செய்யாத நிலையில், தேர்தலின்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 738 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 246 கட்டுப்பாட்டு கருவி இயந்திரங்களை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கீழ் தளம் அறை எண் 14ல் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. அதனை தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, அனைத்து கட்சியினர் முன்னிலையில் திறந்து பார்வையிடப்பட்டது.

பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து மீண்டும் பாதுகாப்பு கிடங்கில் வைத்து பாதுகாக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், நேர்முக உதவியாளர் (பொ) சைபுதீன், தோதல் தாசில்தார் நேரு, துணை தாசில்தார் ரவிவர்மன், சக்திவேல் (திமுக), பாலகிருஷ்ணன் (அதிமுக), வெங்கடேஷ்வரன் (காங்கிரஸ்), தண்டபாணி (மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட்), குமார் (ஆம் ஆத்மி கட்சி), ஆதி கிருஷ்ணன் (பகுஜன் சமாஜ் கட்சி), மோகன்குமார் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஆரியப்பராஜா(தேமுதிக) உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2016ம் ஆண்டுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: