12 மணி நேர வேலையை கைவிட வேண்டும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

கரூர், நவ. 29: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் லிங்கேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவக்குமார், கரூர் மாவட்ட செயலாளர் சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொரளாளர் சாமிவேல் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், கலந்து கொண்டு பேசினார்.

இதில், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை நேரம் கைவிடப்பட்டு சட்டப்படியான 8 மணி நேர வழங்கி, மூன்று ஷிப்ட் முறையில் ஆம்புலன்ஸ் இயக்கவேண்டும். தமிழகம் முழுவதும் தொழிலாளர்களின் வாரவிடுமுறை நாட்களில் ஆள்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களை தடையின்றி இயக்கவேண்டும்.

கரூர் மாவட்டத்தில் அடிக்கடி இயக்காமல் நிறுத்தி வைக்கப்படும் ஆம்புலன்ஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 108 ஆம்புலன்ஸ்களை சேவையில் இருந்து அகற்றுவதை கைவிட்டு விட்டு திரும்ப அந்தந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு 108 ஆம்புலன்1களை இயக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி 2024ம் ஆண்டு ஜனவரி 8ம்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராடடத்தில் ஈடுபடுவது என சிவகங்கையில் நடைபெற்ற மாநில காரியகமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில், கரூர் மாவடட வேலை நிறுத்த போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

The post 12 மணி நேர வேலையை கைவிட வேண்டும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: