ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கு முடித்து வைப்பு

புதுடெல்லி: கடந்த 2011 முதல் 2013 வரை ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஜெயந்தி நடராஜன். 2012ம் ஆண்டு ஜார்க்கண்டில் எஃகு ஆலை அமைப்பதற்காக சட்ட விதிகளை மீறி வன நிலத்தை மாற்றியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜெயந்தி நடராஜன் மீது 2014ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 6 ஆண்டுகால விசாரணைக்குப் பின், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர போதிய ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை தெரிவித்துள்ள சிபிஐ வழக்கை முடித்து வைத்துள்ளது. ஜெயந்தி நடராஜன் கடந்த 2015ம் ஆண்டு ராகுல் காந்தி மீது புகார் கூறி காங்கிரசில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கு முடித்து வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: