தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தால் 24 மணி நேரத்தில் சொத்துக்கள் முடக்கம்: விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நிறுவனங்களின் சொத்துக்களை 24 மணி நேரத்தில் முடக்க வேண்டும் என்று விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மோசடி மற்றும் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் ஒன்றிய அரசு நிறுவனமான நிதிப் புலனாய்வுப் பிரிவு புதிதாக அறிமுகப்படுத்திய சட்டத்தின் பிரிவு 12ஏன் கீழ், மோசடி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையைத் தொடங்குவதற்கான நோடல் ஏஜென்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இனிமேல் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் தீவிரவாத அமைப்பாக கண்டறியப்பட்டு, அதற்கு நிதி உதவி செய்ததாக அறிவிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களை அடுத்த 24 மணி நேரத்தில் முடக்கும்படி அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தால் 24 மணி நேரத்தில் சொத்துக்கள் முடக்கம்: விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: