புதிய திறமைகளை கண்டறிய உதவும்…

நானும் எல்லோரையும் போன்று தெருவில் தான் விளையாட ஆரம்பித்தேன். மும்பையின் நவஜீவன் காலனியில் நான் விளையாடாத இடமே கிடையாது. பின்னர் நான் படித்த டான்போஸ்கோ பள்ளியாக இருந்தாலும் சரி, கல்லூரியாக இருந்தாலும் சரி, அங்கும் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அங்கு விளையாடிய கிரிக்கெட் தான் எனக்கு சர்வதேச களத்தில் என்னை மெருகேற்றிக் கொள்ள உதவியாக இருந்தது. எனவே இந்த ஐ எஸ் பி எல் மேலும் பல புதிய திறமைகளை கண்டறிய உதவியாக இருக்கும். உலக கோப்பையை இந்தியா வெல்ல முடியாமல் போனது உண்மையில் இதயத்தை நொறுக்கும் நிகழ்வாக தான் இருந்தது.

ஆனாலும் இன்னும் காலம் இருக்கிறது. இந்தியா கட்டாயம் உலக கோப்பையை வெல்லும். விரைவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையிலும் இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. சச்சின் கூட 6 உலக கோப்பையில் விளையாடி கடைசியில் தான் அவரால் உலகக் கோப்பையை கையில் ஏந்த முடிந்தது. நமது வீரர்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. அணியில் மிகவும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் உலகக்கோப்பை நம் கை வசம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஐஎஸ்பிஎல் ஆணையர் ரவி சாஸ்திரி

The post புதிய திறமைகளை கண்டறிய உதவும்… appeared first on Dinakaran.

Related Stories: