கரூர், சோமூர், நெரூர் பகுதியில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை

கரூர், நவ. 28: கரூர் மாவட்டம் சோமூர், நெரூர் என மூன்று பகுதிகளுக்கான சாலை பிரியும் பகுதியில் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு வைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பகுதியில் இருந்து நெரூர், சோமூர், திருமுக்கூடலூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் நெரூர் சாலையில் உள்ள 16 கால் மண்டபம் அருகே பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து செல்கிறது.

இந்த பிரிவுச் சாலையின் வழியாக கிராமப்பகுதிகளுக்கான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது.

இரவு நேரத்தில் இந்த சந்திப்பு பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் 16 கால் மண்டப சந்திப்பு பகுதியை ஒட்டி பேரிகார்டு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பான வாகன போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

The post கரூர், சோமூர், நெரூர் பகுதியில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: