மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்க செயலி கடந்த 2 ஆண்டுகளில் ₹ 30 கோடி விவசாய கடன்

கரூர், நவ. 28: கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டிருப்பதாக வங்கி கிளை திறப்பு விழாவில் கலெக்டர் தெரிவித்தார். கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் மாவட்ட கலெக்டா தங்கவேல் கலந்து கொண்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பேங்க் ஆப் இந்தியா கரூர் கிளையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வு குறித்து கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் முதன் முதலில் வங்கியானது சேமிப்பிற்காக தொடங்கப்பட்டு, பின்னர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படத துவங்கியது.
மேலும், சமூக முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் சாதாரண கிராமப்புற ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு, குறு தொழில் செய்யக்கூடிய தொழிற்சாலைகள் வைத்து நடத்தும் ஒவ்வொருவருக்கும் சேவை புரிந்து வருகிறீர்கள்.

கல்விக் கடன் மூலம் மாணவர்களுக்கும என பல்வேறு வகையில் ஒவ்வொரு சமுதாயத்தையும் கட்டமைத்து அவர்களுடைய மேம்பாட்டிற்காக உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறீர்கள். அதற்காக பாராட்டுகிறேன். அதற்கான சேவை புரியும் அனைத்து ஊழியர்களையும் பாராட்டுகிறேன். இப்போது, புதிதாக திறந்து இருக்க கூடிய இந்த கிளை மேலும் வளர்ச்சி அடைந்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பாக வளர வேண்டும் என்றார்.

கரூர் செங்குந்தபுரம் பஸ் ஸ்டாப் அருகில் செயல்பட்டு வந்த பேங்க் ஆப் இந்தியா கருர் கிளை இப்போது, கோட்டாட்சியர் அலுலவகம் எதிரே உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள பேங்க் ஆப் இந்தியா கரூர் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிளையில் ரூ. 150 கோடி அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 30 கோடி மதிப்பிலான விவசாய கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகன கடன், வீட்டு கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில், கோவை மண்டல மேலாளர் அஜய் தாக்கூர், முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், தஞ்சாவூர் எல்ஐசி மேலாளர் விஸ்வநாத் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்க செயலி கடந்த 2 ஆண்டுகளில் ₹ 30 கோடி விவசாய கடன் appeared first on Dinakaran.

Related Stories: