வங்கதேசம் நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் : இன்று தொடக்கம்

சில்ஹெட்: வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் இன்று தொடங்கும் நிலையில், 2வது டெஸ்ட் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் டிச.6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய சீசனில் இந்த இரு அணிகளும் விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால், வெற்றியுடன் தொடங்க வரிந்துகட்டுகின்றன. சிஹெட்டில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டி இது. 2018ல் முதல் முறையாக நடந்த டெஸ்டில் ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. நியூசிலாந்து அணி, வங்கதேசத்தில் சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

The post வங்கதேசம் நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் : இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: