’சமூகநீதி காவலர் வி.பி.சிங்’கிற்கு சென்னையில் உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி ஆகியோரும் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தனர். சமத்துவம் என்பது அதிகார பரவலாக்கம் என்ற வி.பி.சிங் கருத்துக்கள் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் வி.பி.சிங் அவர்களின் மகன்கள் அஜய் சிங், அபய் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

The post ’சமூகநீதி காவலர் வி.பி.சிங்’கிற்கு சென்னையில் உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: