ஆர்ச்சரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்: டைட்டன்ஸில் நீடிக்கிறார் ஹர்திக்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடருக்கான 2024 சீசன் வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 10 அணிகளும் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், டைட்டன்ஸ் அணி அவரை தக்கவைத்துள்ளதுடன் கேப்டனாக நீடிப்பதாகவும் அறிவித்துள்ளது. எனினும், இது தற்காலிகமானது தான் என்றும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேறு ஒரு வீரரை தேர்வு செய்த பிறகு ஹர்திக் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இப்படி வீரர்களை மாற்றிக்கொள்வதற்கு டிச.12 வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணியில் ஜோஷ் ஹேசல்வுட், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி உள்பட 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஹாரி புரூக் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏலத்தில் இவர் ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

* சன்ரைசர்ஸ் ஐதராபாத் தக்கவைப்பு:

எய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் கிளாஸன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, மார்கோ யான்சென், அப்துல் சமத், கிளென் பிலிப்ஸ், மயாங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது (ஆர்சிபி-ல் இருந்து), சன்விர் சிங், புவனேஷ்வர் குமார், மயாங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி.நடராஜன், பஸல்லாக் பரூக்கி, உபேந்திரா யாதவ். விடுவிப்பு: ஹாரி புரூக், கார்த்திக் தியாகி, அடில் ரஷித், அகீல் உசேன், சமர்த் வியாஸ், விவ்ரந்த் ஷர்மா.

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தக்கவைப்பு:

டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல், கோஹ்லி, ரஜத் பத்திதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மகிபால் லோம்ரர், கர்ண் ஷர்மா, மனோஜ் பண்டாகே, மயாங்க் தாகர், வைஷாக் விஜயகுமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, ராஜன் குமார். விடுவிப்பு: வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசல்வுட், ஃபின் ஆலன், மைகேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வேய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதார் ஜாதவ்.

* மும்பை இந்தியன்ஸ் தக்கவைப்பு:

ரோகித் ஷர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், சூரியகுமார், இஷான், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரான் கிரீன், ஷாம்ஸ் முலானி, நெஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியுஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹரண்டார்ப், ரொமாரியோ ஷெப்பர்ட். விடுவிப்பு: அர்ஷத் கான், ரமன்தீப் சிங், ஹ்ரிதிக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோப்ரா ஆர்ச்சர், டிரைஸ்டன் ஸ்டப்ஸ், டுவன் யான்சென், ஜை ரிச்சர்ட்சன், ரைலி மெரிடித், கிறிஸ் ஜார்டன், சந்தீப் வாரியர்.

* குஜராத் டைட்டன்ஸ் தக்கவைப்பு:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேடு, விரித்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் ஷங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் திவாதியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மோகித் ஷர்மா.

* சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைப்பு:

எம்.எஸ்.தோனி, கான்வே, கெயிக்வாட், ரகானே, ஷேக் ரஷீத், ஜடேஜா, சான்ட்னர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ஹங்கர்கேகர், தீபக் சஹார், மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சவுதாரி, பிரஷாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரணா. விடுவிப்பு: பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, டுவைன் பிரிடோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, ஆகாஷ் சிங், கைல் ஜேமிசன், சிசந்தா மகாலா.

The post ஆர்ச்சரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்: டைட்டன்ஸில் நீடிக்கிறார் ஹர்திக் appeared first on Dinakaran.

Related Stories: