அஞ்சல் வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 

திருச்சி, நவ.26: திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024ம் ஆண்டுக்கான 23வது அஞ்சல் வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான (புதிய பாடத்திட்டத்தின்படி) மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tncuicm.com என்ற இணையதள வழி முகவரியில் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ப்ளஸ்2 தேர்ச்சி மற்றும் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயின்றவர்களும் இப்பயிற்சியில் சேரலாம் என திருச்சி மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண்-1 பழைய குட்ஷெட் ரோடு அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம் சிங்காரத்தோப்பு, திருச்சி, தொலைபேசி எண்: 0431-2715748 அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

The post அஞ்சல் வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: