ராஜபாளையம் கல்லூரியில் யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராஜபாளையம், நவ. 26: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வனவிலங்கு சங்கம் மற்றும் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியின் சுற்றுசூழல் சங்கம், புகைப்பட சங்கம் இணைந்து நடத்திய, காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந்திய வன விலங்கு அறக்கட்டளையின் மூத்த ஆலோசகரும் தலைமை மருத்துவருமான டாக்டர். அஷ்ரஃப் கலந்து கொண்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை பற்றி விளக்க உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, திட்ட கண்காட்சி மற்றும் ஊடக விளக்க உரையும் நடைபெற்றன. இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த 146 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய படைப்பாற்றல்களை சமர்பித்தனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கணேசன், துணைமுதல்வர் ராஜகருணாகரன் மற்றும் நிர்வாக பொதுமேலாளர் செல்வராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்படி கல்லூரியின் கூடுதல் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சுற்றுசூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் ரேவதி, புகைப்பட சங்க ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் பெருமாள் மற்றும் பேராசிரியர்களும், அலுவலக உதவியாளர்களும் இணைந்து செய்திருந்தனர்.

The post ராஜபாளையம் கல்லூரியில் யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: