திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழலில் இருவேறு நபர்களிடம் ஆன்லைன் மூலம் நூதன முறையில் ரூ.54,000 மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. ராஜ்குமார் என்பவரின் கிரெடிட் கார்டில் 50% கடன் தொகையை அதிகரித்து தருவதாகக் கூறி ரூ.10,000 மோசடி அரங்கேறியுள்ளது. அப்துல் லத்தீப் என்பவரது வங்கிக் கணக்கில் சுய விவரங்களை புதுப்பிக்க வேண்டும் எனக் கூறி ரூ.44,000 மோசடி நடைபெற்றுள்ளது. இருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவள்ளூர் மாவட்டம் புழலில் இருவேறு நபர்களிடம் ஆன்லைன் மூலம் நூதன முறையில் ரூ.54,000 மோசடி..!! appeared first on Dinakaran.
