தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கிடையாது உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனு: நவ.28ல் பரிசீலனை

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்த உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு நவ.28 பரிசீலிக்கப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. தன் பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் 21 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்து முடித்த தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு கடந்த மே 11ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 17ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதிகள் எஸ்.ரவீந்தர் பட், ஹீமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகிய 3 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர்.

ஆனால் சிறப்பு திருமண சட்டத்தின்கீழ், தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடியாது என 5 நீதிபதிகளும் ஒருமனதாக தெரிவித்தனர். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மறுஆய்வு மனுவை நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை. இந்த மனு நவம்பர் 28ம் தேதி பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

The post தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கிடையாது உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனு: நவ.28ல் பரிசீலனை appeared first on Dinakaran.

Related Stories: