பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அதிகரிப்பு : ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், அதிகரித்து வருகிறது என்று ஒன்றிய அறிவியல், தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.இஸ்ரோ மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்த புவியியல் தொழில்நுட்பம், பயன்பாடுகள் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

விண்வெளித் துறையில் புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கம், தொழில் துறைகளின் இணைப்புகள் காரணமாக, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக உயரக்கூடும் என்று வெளிநாட்டு வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் அறிவியல் மாற்றத்தில் கடந்த பத்து ஆண்டுகள் ஒரு திருப்புமுனை காலம் என்று அவர் குறிப்பிட்டார்.விண்வெளித் தொழில்நுட்பம் படிப்படியாக இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக மாறி வருகிறது என்றும், மேலும் இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டலில் அதன் பங்கு அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

The post பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அதிகரிப்பு : ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் appeared first on Dinakaran.

Related Stories: