இந்தியாவில் 1,000 பெண்களில் 3 பேர் கருக்கலைப்பு: உலகளவிலான புள்ளி விபரம் தகவல்

நியுயார்க்: இந்தியாவில் 1,000 பெண்களில் 3 பேர் கருக்கலைப்பு செய்து கொள்வதாக உலகளவிலான புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவிலான கருக்கலைப்பு குறித்த புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளது. அதன் 15 முதல் 44 வயதுடைய 1,000 பெண்களுக்கு எத்தனை பேர் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர் என்று நாடுகள் வாரியான தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த புள்ளி விபரங்களின்படி உலகிலேயே அதிகளவில் கருக்கலைப்பு நடக்கும் நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அதாவது 1000 பெண்களுக்கு 54 பேர் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். அதற்கடுத்த நாடுகளின் பட்டியலில் வியட்நாம் (1000 பேருக்கு 35 பேர்), கஜகஸ்தான் (35), எஸ்தோனியா (33), பெலாரஸ் (32) ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

அமெரிக்காவில் 1000 பேருக்கு 20 பேரும், ஜப்பானில் 12 பேரும், ஸ்பெயினில் 8 பேரும் என்று பட்டியல் நீளும் நிலையில், இந்தியாவில் 1,000 பெண்களுக்கு 3 பேர் கருக்கலைப்பு செய்கின்றனர். அதேநேரம் போர்ச்சுகலில் 0.2 பேரும், மெக்சிகோவில் 0.1 பேரும் கருக்கலைப்பு செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் 1,000 பெண்களில் 3 பேர் கருக்கலைப்பு: உலகளவிலான புள்ளி விபரம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: