அதில் 587 முதலீட்டாளர்கள் புகார்களின்படி, 3,800க்கும் மேற்பட்ட வைப்பீடுகள் வாயிலாக, 47.68 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. விசாரணையின் போது, இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.தலைமறைவான இயக்குனர் அப்பாதுரை, வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இந்த விசாரணை நிதி மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் டி.பாபு, எம்.இ.வி.துளசி ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.கருணாநிதி பிறப்பித்த தீர்ப்பில், இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகளும், இயக்குநர் வித்யாவுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இயக்குநர்கள், ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மொத்த அபராத தொகையான 191 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில், 180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவிடப்படுகிறது. இயக்குநர் ராகவன், மோகன் ராமசாமி ஆகிய இருவர் விடுவிக்கப்படுகின்றனர். இறந்த மூவரின் மீதான வழக்கு கைவிடப்படுகிறது என்று கூறியுள்ளார்.
The post ரூ.48 கோடி முதலீடு மோசடி சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
