தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

சென்னை: தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தொடங்கி வைத்தார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், அடையாறு செயின்ட் லூயிஸ் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் நேற்று நடந்தது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையேற்று கொடியசைத்து, போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத வாய்பேசாத, பார்வையற்ற மற்றும் அறிவுசார் குறைபாடுடைய 16 சிறப்பு பள்ளிகளில் பயலும் 612 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், செயின்ட் லூயிஸ் காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளி தாளாளர் இன்னாசி ராஜ், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்துகொண்டனர்.

 

The post தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: