பரமக்குடி,நவ.20: பரமக்குடி அருகே மேலாய்குடி திருசண்முகநாதபுரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரக்கனை முருகப்பெருமான் வேலால் வதம் செய்யும் காட்சியை மேலாய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை பாளையம்பட்டி ஜமீன்தார் கோவில் நிர்வாகஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
The post பரமக்குடி அருகே கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் appeared first on Dinakaran.