இந்திய எல்லைக்குள் கிடந்த பாகிஸ்தான் டிரோன்

சண்டிகர்: பஞ்சாப் தார்ன் தரன் மாவட்டம் வான் கிராமப்பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நேற்று முன் தினம் பி.எஸ்.எப். வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லையில் உள்ள முள்வேலி பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள வயலில் ஒரு மர்ம பொருள் கிடந்ததை அவர்கள் பார்த்தனர். உடனே அங்கு விரைந்த வீரர்கள் அது ஒரு டிரோன் என்று அறிந்து, எச்சரிக்கையாக அதை கைப்பற்றினர்.

அது சீனாவில் தயாரிக்கப்பட்ட குவாட்காப்டர் வகை டிரோன் என்று தெரிய வந்தது. அதை தொலைவிலிருந்து இயக்கி, குறைவான உயரத்தில் பறக்க வைத்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை தேவையான இடத்துக்கு எளிதாக கடத்த முடியும் என்று பி.எஸ்.எப். அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகத்திற்கிடமாக டிரோன் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கே முடுக்கி விடப்பட்டது.

The post இந்திய எல்லைக்குள் கிடந்த பாகிஸ்தான் டிரோன் appeared first on Dinakaran.

Related Stories: