70வது கூட்டுறவு வார விழா சாத்தான்குளம் கூட்டுறவு சங்கத்தில்109 பேருக்கு ₹1.17 கோடி கடனுதவி

சாத்தான்குளம், நவ. 18: சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் 70வது கூட்டுறவு வார விழா, சிறப்பு உறுப்பினர் கல்வி திட்டம் நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர்- செயலாட்சியர் நடுக்காட்டுராஜா தலைமை வகித்து கூட்டுறவு கொடியேற்றினார். கூட்டுறவு சார் பதிவாளர் வெங்கட்குமார் வரவேற்றார். கூட்டுறவு உறுதிமொழியை அலுவலர் பிரபாவதி வாசித்தார். மேலாண்மை துணை பதிவாளர் மாரியப்பன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார் பதிவாளர்- செயலாட்சியர் சாம்டேனியல், முன்னாள் சங்க உறுப்பினர்கள் வேணுகோபால், தங்கபாண்டியன், வட்டார மனிதநேய பெருமன்ற தலைவர் மகாபால்துரை, புத்தன்தருவை ஊராட்சி முன்னாள் தலைவர் சித்திரைக்கனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் வட்டார கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 109 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 17 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை இணை பதிவாளர்- செயலாட்சியர் நடுக்காட்டுராஜா வழங்கி பேசினார். கூட்டுறவு சார் பதிவாளர்கள் லதா, அஜிதா, வளம்மிக்கேல்தளபதி, துணை பதிவாளர் அலுவலக அதிகாரிகள் செல்வசுந்தரி, மாரியப்பன், வியாபாரிகள் சங்கத் தலைவர் சசிகரன், ஓய்வுபெற்ற கடன் சங்க செயலாளர் சாமுவேல், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பெனிஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் சங்க செயலாளர் எட்வின் தேவாசீர்வாதம் நன்றி கூறினார்.

The post 70வது கூட்டுறவு வார விழா சாத்தான்குளம் கூட்டுறவு சங்கத்தில்109 பேருக்கு ₹1.17 கோடி கடனுதவி appeared first on Dinakaran.

Related Stories: