சீக்கிரம் சாப்பிடாததால் ஆத்திரம் பிரியாணி சாப்பிட வந்தவர் மீது தாக்குதல்: ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

 

சிவகாசி, நவ.17: சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் காளீஸ்வரன்(30). இவர் சிவகாசி குறுக்குப் பாதை அருகே உள்ள பிரியாணி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்கள் என கடையின் உரிமையாளர் ரோகித் கூறியுள்ளார். வெகு நேரம் கழித்து சாப்பாடு கொடுத்தால் எப்படி சீக்கிரம் சாப்பிடுவது என காளீஸ்வரன் திருப்பி கேட்டுள்ளார்.

இதனால் கடையின் உரிமையாளர் ரோகித் மற்றும் ஓட்டலில் வேலை பார்க்கும் நபர்கள் சேர்ந்து காளீஸ்வரனை கரண்டியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காளீஸ்வரன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடையின் உரிமையாளர் ரோகித், கடையில் வேலைபார்க்கும் தளவாய்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சுந்தர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சீக்கிரம் சாப்பிடாததால் ஆத்திரம் பிரியாணி சாப்பிட வந்தவர் மீது தாக்குதல்: ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: