சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால், 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே, இது தொடர்பான சிறப்பு முகாம்கள் கடந்த 4ம் தேதி மற்றும் 5 ஆகிய தேதிகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.இதற்கிடையில், தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் தேதிகளை 18.11.2023 மற்றும் 19.11.2023க்கு பதிலாக, 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளாக மாற்றியமைத்து அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 18, 19 தேதிக்கு பதில் வருகிற 25, 26ம் தேதி நடைபெறும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.
