தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி தென்திருப்பதி வாரி ஆலயத்தில் சுவாமி தங்கத்தேரில் திருவீதி உலா

மேட்டுப்பாளையம்: தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி தென்திருப்பதி வாரி ஆலயத்தில் நேற்று சுவாமி தங்கத்தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி திருமலை வாரி ஆலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு மலையப்ப சுவாமி தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆஸ்தான பூஜை நேற்று காலை சுப்ரபாதத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், தோமாலை, ஆர்த்தி, சகஸ்ர நாம அர்ச்சனை, நிவேதனம், பலி, சாற்றுமுறை மற்றும் ஆரத்தி நடைபெற்றது.

இதை தொடர்ந்து நேற்று மாலை மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயாருடன் தங்கத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தங்கத்தேரில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து இறுதியாக நிலை அடைந்தார். தொடர்ந்து மலையப்பசுவாமிக்கு விசேஷ பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கேஜி நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள், பக்தர்கள் என திரளாக கலந்து கொண்டு மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

The post தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி தென்திருப்பதி வாரி ஆலயத்தில் சுவாமி தங்கத்தேரில் திருவீதி உலா appeared first on Dinakaran.

Related Stories: