நவ. 21ல் தொடங்குகிறது சென்னையில் தேசிய ஸ்னூக்கர்

சென்னை: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 90வது தேசிய சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நவ. 21ல் சென்னையில் தொடங்குகிறது.இது குறித்து தமிழ் நாடு பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர்ஸ் சங்க தலைவர் பி.ஜி.முரளி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான 90வது பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர் சாமபியன்ஷிப் போட்டி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது (நவ.21-டிச.25). இதில் 1500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

மாஸ்டர்ஸ், சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் என பல்வேறு பிரிவுகளாக ஆடவர், மகளிர் போட்டிகள் தனித்தனியே நடத்தப்படும். உலக சாம்பியன் பங்கஜ் அத்வானி, ஆதித்ய மேத்தா, ரஃபத் ஹபீப், வித்யா பிள்ளை, பிரிஜேஷ் தமானி, ஸ்ரீகிருஷ்ணா சூரியநாரயணன், அனுபமா ராமசந்திரன் உட்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியை நடத்த தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இளைஞர் நலன் துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post நவ. 21ல் தொடங்குகிறது சென்னையில் தேசிய ஸ்னூக்கர் appeared first on Dinakaran.

Related Stories: