ஊடு பயிர் சாகுபடிக்கு மானியம் தோட்டக்கலைத்துறை அழைப்பு

 

உடுமலை, நவ. 9: மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மடத்துக்குளம் வட்டாரத்தில் விவசாயிகள் பல்வேறு விதமான சாகுபடி முறைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தோட்டக்கலைப் பயிர்களான தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, வாழை, மர முருங்கை போன்ற பல்வேறு வகையான பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்து வருகின்றனர். பல்லாண்டு பயிர்களை விவசாயிகள் அதிகம் விரும்பி பயிர் செய்வதற்கு விவசாய வேலைக்கு தொடர்ந்து ஆட்கள் கிடைக்காமல் இருப்பதும், விவசாயம் தொடர்பான வேலைகள் குறைவாக அமைவதும் காரணமாக அமைகிறது இருந்தாலும் வருமானம் என்பது பல்லாண்டு பயிர்களில் ஒரு சில குறிப்பிட்ட இடைவெளிகளில் மட்டுமே கிடைத்து வருகிறது.

எனவே தொடர்ச்சியாக வருமானம் கிடைத்திடும் வகையில் பல்லாண்டு பயிர்களுக்கு இடையே ஊடு பயிர்களாக தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்வதன் மூலம் பல்லாண்டு பயிர்கள் பலன் தருவதற்கு முன்பாகவே ஒரு தொடர்ச்சியான வருமானத்தை பெற முடியும் தனிப்பயிர்களை காட்டிலும் கூடுதல் மகசூல், கூடுதல் வருமானம் அளிக்கிறது மண்ணின் இரு அடுக்குகளிலிருந்தும் ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதால் ஊடு பயிர்கள் மண்வளத்தை பராமரிக்கின்றன.

மண்ணின் நீரோட்டத்தை குறைத்து களைகளை கட்டுப்படுத்துகிறது. ஊடுபயிர்கள் மற்ற பயிருக்கு நிழலையும் ஆதரவையும் தருகின்றன. ஒரே பகுதியில் அதிக அளவு பயிர் செடிகள் வளர்க்க முடிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் மூலம் 2023-24ம் நிதி ஆண்டில் பல்லாண்டு. தோட்டக்கலை பெயர்களில் ஊடு பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு 1 எக்டருக்கு மானியமாக ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள விதைகள் மற்றும் அங்கக இடு பொருட்களை வழங்குகிறது. மொத்தமாக 19 எக்டருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

The post ஊடு பயிர் சாகுபடிக்கு மானியம் தோட்டக்கலைத்துறை அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: