தொடர்மழையால் மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு

 

தஞ்சாவூர்,நவ.8: தொடர் மழையால் தஞ்சாவூர் அருகே மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள மருங்குளம், ஏழுப்பட்டி, ராவுசாப்பட்டி கொத்தம்பட்டி, தாளம்பட்டி, மாப்பிள்ளை, நாயக்கன்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, திருக்கானூர்பட்டி, குருங்குளம், மின்னாத்தூர், தோழகிரிபட்டி, வாகரகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்திருந்தனர். இதில் பெரும்பாலான ஊர்களில் 70 சதவீதம் அறுவடையை முடித்து விட்டனர். ஆனால் பாக்கியுள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் தொடர் மழை காரணமாக அறுவடை பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஈரமாக உள்ள மக்காச்சோளத்தை அறுவடை செய்து வந்தால் காயவைப்பதற்கு போதிய இட வசதி இல்லாததால் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். மேலும் சாலைகளில் காயவைத்தால் அடிக்கடி மழை வரும் போது அதை மூடுவதற்கு போதிய அளவு தார்ப்பாய் இல்லாததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

The post தொடர்மழையால் மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: