நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா ,‘‘ஒரு அமைச்சரின் மகன் ரூ.1000 கோடி,ரூ.100 கோடி லஞ்சம் கேட்கும் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பாஜ ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதை நிரூபிக்கும் வகையில் இது உள்ளது’’ என்றார். இதனிடையே,இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தேவேந்திர பிரதாப் வீடியோ போலியானது என மறுத்துள்ளார். சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் மகனின் இந்த வீடியோ ம.பி. தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பல கோடி கேட்டு ஒன்றிய அமைச்சர் மகன் பேசும் வீடியோ வைரல்: மபி தேர்தல் களத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.