பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்

பாரிஸ்: ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவுடன் மோதிய ஜோகோவிச் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 7வது முறையாக இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் தொடர்களில அவர் வென்ற 40வது சாம்பியன் பட்டம் இது. இதன் மூலம் ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் 8வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தையும் வசப்படுத்தி ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். டாப் 5 வீரர்கள்: 1. ஜோகோவிச் (9945), 2. கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின், 8455), 3. டேனில் மெத்வதேவ் (ரஷ்யா, 7200), 4. யானிக் சின்னர் (இத்தாலி, 5490), 5. ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா, 4805).

The post பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: