அபாய கட்டத்தில் தலைநகரம் : ஊழியர்கள் 50% பேருக்கு வீட்டில் இருந்து வேலை; நவம்பர் 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

டெல்லி : டெல்லியில் அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆரில் அரசு, மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, டெல்லிக்குள் லாரிகள் நுழைய, கட்டுமானத் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தேசிய தலைநகரில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நவம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆர் மண்டலத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. விடுமுறை நாளான நேற்று நகரில் காற்றின் தரக்குறியீட்டு அளவு 400க்கும் மேல் சென்றது. இந்த நிலையை எட்டும்போது மாசுபாடு உடைய காற்றை மக்கள் சுவாதித்தால் சுவாசப்பிரச்னைகள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இதன் காரணமாகவே மாசுபாடு அடைவதை தடுத்து காற்றின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புழுதி மாசுகை கட்டுபத்த மரங்கள், சாலைகளில் தண்ணீர் தெளித்தல், கட்டுமானப்பணிகளுக்கு கட்டுப்பாடு, ஓட்டல்களில் நிலக்கரி பயன்பாடு, டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இதுதவிர, போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்குகள் எரியத் தொடங்கிய உடன் சிக்னலில் காத்திருக்கும் வாகனங்கள் பச்சை விளக்கு ஆன் ஆகும் வகையில் வாகனங்களின் இன்ஜின்களை அணைத்து வைக்கும் திட்டம், கிரேடடு ரெ1்பான்ஸ் செயல்திட்ட பரிந்துரைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

இந்நிலையில், தான் மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய மற்றும் என்சிஆர் மண்டல அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து அமல்படுத்துமாறு காற்றின் தரத்தை மேம்படுத்த தேவையான உத்திகளை வகுத்து செயல்படுத்தும் காற்றுத் தர மேலாண்மை ஆணையம், உத்தரவிட்டது. இதனையேற்று ஆம் ஆத்மி அரசு மற்றும் ஒன்றிய அரசு அடுத்த கட்டமாக மேலும் சில நடவடிக்கைகளை எடுத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டன.

அதன்படி,
* காற்றின் தரத்தை மேம்படுத்த, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காற்றுத்தர மேலாண்மை ஆணையம் டெல்லி-என்சிஆர் அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதனையேற்று வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
* இதன் தொடர்ச்சியாக, காற்று மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் இறுதிக் கட்டமான நிலை 4ஐ அமல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, காற்றின் தரக்குறையீடு 450க்கு மேல் செல்லும் போது, இந்த 4ம் நிலை பரிந்துரையை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
* இதன்படி, லாரிகள், சரக்கு ஏற்றி வரும் நான்கு சக்கர வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து சிஎன்ஜி, மின்சாரம், பிஎஸ்-4 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாத அனைத்து இலகுரக, கனரக சரக்கு வாகனங்களுக்கும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் நவம்பர் 10ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* அதேபோன்று 6 முதல் 12 ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* இதனிடையே, காற்றுமாசு மிகக் கடுமை பிரிவுக்கு சென்றுள்ள நிலையில், இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை முதல்வர் கெஜ்ரிவால் கூட்டியுள்ளார். இதில், காற்று மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
* முன்னதாக, மாசுபாட்டிலிருந்து இளம் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், டெல்லி அரசு அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதாக அறிவித்தது.
* கடும் பனிமூட்டம் காரணமாக, விமான சேவைகள் டெல்லியில் மட்டுமின்றி அரியானா, ராஜஸ்தான் மற்றம் உத்தரபிரசேத்தில் பாதிப்புக்குள்ளானது.

The post அபாய கட்டத்தில் தலைநகரம் : ஊழியர்கள் 50% பேருக்கு வீட்டில் இருந்து வேலை; நவம்பர் 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.

Related Stories: