பல்லடம்: திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினசரி ₹100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். நூல் விலை உயர்வு, கூலி பிரச்னை மற்றும் தொழிலில் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், அருகிலுள்ள மாநிலங்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் துணிகள் தேக்கமடைந்தன. துணி உற்பத்தி 60 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், துணி நெசவு தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால் நேற்று (5ம் தேதி) முதல் வரும் 25ம் தேதி வரை முழுமையாக உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்தது. அதன்படி திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
The post நூல் விலை, கூலி பிரச்னை எதிரொலி விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.