இந்திய வங்கதேச எல்லையில் கடத்தலை தடுக்கும் தேனீக்கள்

கொல்கத்தா: இந்தியாவும், வங்கதேசமும் 4,096 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில் வங்கதேசம் சுமார் 2,217 கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. வங்கதேசத்தின் நாடியா மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள வேலிகளை வெட்டி கால்நடைகள், தங்கம், வௌ்ளி, போதைப் பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கவும், நாடியா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் எல்லை பாதுகாப்பு படை ஒரு தனித்துவமான முயற்சியை தொடங்கி உள்ளது. ஒன்றிய அரசின் அதிர்வு மிக்க கிராம திட்டத்துடன் எல்லை பாதுகாப்பு படை கைக்கோர்த்து தேனீக்கள் வளர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதையடுத்து தேனீக்களின் மகரந்த சேர்க்கைக்காக பல்வேறு பூச்செடிகள், பழ மரக்கன்றுகள் மற்றும் துளசி, அஸ்வகந்தா, கடுக்காய், கற்றாழை உள்ளிட்ட மருத்துவ செடிகளையும் ஆயுஷ் அமைச்சகம் வழங்கி உள்ளது. இதனை நடவு செய்யும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் வட்டமிடும் தேனீக்கள் மகரந்த சேர்க்கை செய்ய மரத்தலான பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் இந்திய வங்கதேச எல்லை வேலிகளில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் வேலிகளை வெட்ட முயலும்போது பெட்டிகளில் உள்ள தேனீக்கள் திரளாக பறந்து சென்று குற்றவாளிகளை கொட்டும் என்பதால் குற்றங்கள் குறையும்.

The post இந்திய வங்கதேச எல்லையில் கடத்தலை தடுக்கும் தேனீக்கள் appeared first on Dinakaran.

Related Stories: