கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ரூ.30 லட்சம் உண்டியல் வசூல்

 

கரூர், நவ. 4: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. கருர் தாந்தோணிமலையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகதேரோட்டம் மற்றும் புரட்டாசி பெருந்திருவிழா ஆகிய நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இந்த கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புரட்டாசி பெருந்திருவிழாவுக்கு பிறகு கோயிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

கோயில் அதிகாரிகள் முன்னிலையில் இந்த உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கரூர் கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடடனர்.அதன்படி, ரூ. 30 லட்சத்து 10 ஆயிரத்து 959ம், தங்கம் 28 கிராமும், வெள்ளி 176 கிராமும் இருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

 

The post கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ரூ.30 லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: